சுமார் 100 நாட்களின் பின்னர் பாடசாலைகள் மீளத் திறக்கப்படுகின்றன. நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதன் மிகவும் முக்கியமான அடையாளமாக இது நோக்கப்படுகிறது. எனவே, பாடசாலைகளுக்கு செல்லும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவற்றை தொகுத்துத் தருகிறோம்.
1. கட்டாயமாக முகக்கவசனம் அணிந்து கொள்ளுங்கள். பொருத்தமான தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
2. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஏனைய ஆசிரியர்களைச் சந்திப்பதனால் அவர்களை ஆரத்தழுவி வரவேற்க வேண்டாம். ஒரு தூரத்தை பேணிக் கொள்ளுங்கள்.
3. பாடசாலைக்குள் நுழைய முன்னர் கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்.
4. மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்ததும் அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை துரிதமாக மேற்கொள்கொள்வதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்வதே இவ்வாரம் ஆசிரியர்களின் தலையாயக் கடமையாகும்.
5. நேரசூசியை உங்கள் வசதிக்கேற்ற வகையில் தயாரிக்க அதிபருக்கு உதவுங்கள்.
6. ஏனைய வசதிகளை மேற்கொள்ள அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். சுகாதார அடிப்படையில் பாடசாலையை தயார்படுத்துவதில் உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்.
7. கடந்த மாதங்களில் நடாத்திய தொலைக் கல்வி வகுப்புகளில் பங்குபற்றுதல், மற்றும் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்யுங்கள்.
8. தொடர்ச்சியாக பங்குபற்றாத மாணவர்கள் தொடர்பாக தேடிப் பாருங்கள்.
9. எஞ்சிய நாட்களில் மாணவர்களின் கற்றலை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதை்த் திட்டமிடுவதற்கு 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
10. பாடசாலைக்கு மாணவர்கள் வருதல், வெளியேறுதல், ஆசிரியர்களின் வருகை தொடர்பாக நெகிழ்வுப் போக்கு கடைப்பிடிக்குமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பாக அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
11. குறிப்பாக, நகர்ப்புற பிரதேசங்களின் 50 வீதமான பங்குபற்றுதல் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பாடசாலையில் தரித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை.
கல்வி அமைச்சர் கூறுவது போல, நெருக்கடியான காலகட்டத்தில் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்லத் துணிந்துள்ள ஆசிரியர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் தான்.
வாழ்த்துக்கள்.