இம்முறை பல்கலைகழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு டிசம்பம் மாதம் ஆரம்பம் முதல் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் உரையாற்றினார்.
கற்பித்தல் நடவடிக்கைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் புதிதாக இணைக்கப்படவுள்ள மாணவர்கள் கணினி வாங்குவதற்காக அரசு வங்கிகள் மூலம் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாண்டு பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் பதிவுகள் ஒன்லைனில் நடைபெறும் என்றும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 41,500 ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் பல்கலைக்கழக பரீட்சைகளை ஒன்லைனில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை இவ்வாரம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
.