அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு புதிய தவணை பற்றி தெளிவுபடுத்தியுள்ளது.
அறிக்கை தமிழில் மொழிபெயர்ப்பு :www.teachmore.lk
2020 வருட பாடத்திட்ட பூர்த்தி தொடர்பாக பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு அதிபர்களுக்கு ஆலோசனை
புதிய பாடசாலைத் தவணை தரம் 1-5 உட்பட அனைவருக்கும் செயற்படுத்தப்படும்.
எனினும், மேல்மாகணத்தின் கொழும்பு. கம்பஹா மற்றுமு் களுத்தறை மாவட்டங்களின் பாடசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசப் பாடசாலைகள் இத்தினத்தில் ஆரம்பமாகாது.
2020 ஆம் வருடத்திற்கான மூன்றாம் தவணை 23 ஆம் திகதியுடன் நிறைவு பெறும் அதேவேளை, அடுத்த வருடத்திற்கு அனைத்து மாணவர்களும் வகுப்புற்றப்படுவதனால், அதற்குற்ப 2021 ஆம் வருடத்தின் www.teachmore.lkபுதிய பாடசாலைத் தவணையில் புதிய வகுப்பில் மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளவேண்டும். அத்தோடு குறித்த வகுப்புக்கான பாடநூல் இந்த வருடத்திற்குள் வழங்கப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பாடசாலைகளில் 2020 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டம் முடிக்கப்படாத போது புதிய தவணையின் முதலிலிரு மாதங்களில் பாடசாலை மட்டத்திலான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் பாடசாலை நாட்காட்டி சுற்றுநிருபமாக கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும்
ஊடகப் பிரிவு
கல்வி அமைச்சு