மாணவர்களின் புத்தகப்பையின் சுமை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு புத்தப் பையின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.
புத்தகப் பையின் சுமை காரணமாக மாணவர்கள் முதுகுத் தண்டு வலி உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர ்கொள்கின்றனர். அவர்களது புத்தப் பையின் பாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து திட்டமிடுமாறு கல்வி அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.
குறிப்பாக பாரம் குறைந்த புத்தகங்களை அச்சிடுவது பற்றி ஆராயுமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசானை வழங்கிள்ளேன்.
நாம் இதற்கு பின்லாந்து போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியசம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு டெப் வழங்குவதும் அதனைப் பயன்படுத்துவதும் இப்பிரச்சினைக்கான இலகுவான தீர்வாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.