தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்த கருத்துக்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு தடவைகள் புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பான கருத்துக்கள் கூறப்பட்டாலும் இது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி மாலை பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
எனினும் அதன் பின்னர் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அவ்வாறான எந்தத் தீர்மானமும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.