சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.
‘அத தெரண பிக் ஃபோகஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவித்தார்.
இதன் போது அவரிடம் “கடந்த முறை பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது, பாடசாலைகளில் கொரோனா பரவினால் அதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறினீர்கள். இப்போது அவ்வாறு பரவல் இடம்பெறும் சாத்தியங்கள் உள்ளதாகக் கூறுகிறீர்கள் என வினவப்பட்டது.
அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
பொறுப்பற்ற விதமாக நடந்து கொண்டால் எனக்கு பொறுப்பேற்க முடியாது.