ஜனாதிபதி செயலகம் நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளை மையப்படுத்திய போதைப் பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு மாணவர்களை விழிப்பூட்டுவதற்காக விசேட வளங்கள் அடங்கிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள இத்திட்டத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இவ்விணையத்தளம் உள்ளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் தொலைபேசி இன் ஊடாக மிக எளிதாக தரவிறக்கம் செய்யக்கூடியவகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விணையத்தளத்தில் வழிகாட்டிக் கையேடு, விளக்கப்படங்கள், கார்டூன்கள் என தேவையான அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் பாடசாலைகளின் நிகழ்வுகளுக்காக நீங்கள் இவற்றைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.