மத்திய மாகாண ஆங்கில ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான வைபவம் நாளை 12 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் நலவிய ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பட்டதாரிகள் மற்றும் ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 21.7.2019 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்திருந்தாலும், தேர்தல் மற்றும் கொரோனா ஆகிய விவகாரங்களால் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான வைபவம் 12 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித் யு கமகே அவர்களின் தலைமையில் ஆளுனர் செயலகத்தின் கோட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனம் பெறத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.