மன்னார் மற்றும் நாவலப்பிட்டி உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 3 கற்கை நெறிகளுக்காக 119 மாணவர்களும் மன்னார் உயர்தொழில்நுட்ப நிறுவனத்தில் 4 கற்கைநெறிகளுக்காக 501 மாணவர்களும் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு மிகவும் சிறந்த கல்வி சூழல் மற்றும் போதுமான கல்வி அடிப்படை வசதிகளை நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச திட்டத்திற்காக 1208 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக நகரதிட்டமிடல் மற்றும் நீர்விநியோக மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.