விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம் – எம்.ரி. முஹம்மட் ஜினான்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம்12இல் விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் எம்.ரி. முஹம்மட் ஜினான் என்ற மாணவன் கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் வெள்ளைப்பிரம்புக்கு பதிலாக நவீன ஸ்மாட் டிஜிட்டல் தெழில்நுட்பத்துடனான (smart digital test white cane) என்ற புதிய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
விழிப்புலனற்றவர்கள் அல்லது பாரிய பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வெள்ளைப் பிரம்பு (white cane) விளங்குகின்றது. விழிப்புலனற்றவர்களின் ஒளிவிளக்காகவும், ஊன்றுகோலாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு உள்ளது. பிறிஸ்ரலைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவரால் 1921 ஆம் ஆண்டு வெள்ளைப் பிரம்பு கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
ஒரு விபத்தினால் பார்வையை இழந்த ஜேம்ஸ் பிக்ஸ் வீதியில் செல்லும் வாகனங்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு வெள்ளை நிறம் பூசப்பட்ட தடியைப் பயன்படுத்திக் கொண்டாராம். பத்து வருடங்களின் பின்பு வெள்ளைப் பிரம்புப் பாவனை உறுதிப்படுத்தப்பட்டது. 1964ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச ரீதியில் வெண்பிரம்பு பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இன்று விழிப்புலனற்றோர் அல்லது பார்வைக்குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படுவதற்கு ஏராளமான உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. உருப்பெருத்தல் செய்யும் மென்பொருட்கள், கணினித் திரையக வாசிப்பான்கள் (Computer Screen Readers), பெரிய நிறமுள்ள எழுத்துக்கள் கொண்ட தொலைபேசிகள், விசேடமாக வடிவமைக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் எனப் பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன.
எனினும் முதல் முதலில் நான் கண்டுபிடித்துள்ள ஸ்மாட் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையிலான வெள்ளைப்பிரம்பு நவீன வசதிகள் பலவற்றை கொண்டுள்ளன என்கிறார் மாணவன் எம்.ரி. முஹம்மட் ஜினான்
எம்.ரி. முஹம்மட் ஜினான் – சாதனை மாணவணின் கருத்து
நான் தயாரித்துள்ள வெள்ளைப்பிரம்பு பல நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டமைந்துள்ளது. இது போன்ற ஒன்றை இலங்கையில் மாத்திரமல்ல உலகிலும் இதுவரை எவரும் கண்டு பிடிக்கவில்லை. இறுதியாக உலகளாவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்படும் வெள்ளைப்பிரம்பானது வீதியை கடக்க ஒளியை வெளியிடும் சென்சர் மாத்திரம் பயன்னடுத்தப்பட்டுள்ள வெள்ளைப்பிரம்பாகும். ஆனால் நான் தயாரித்துள்ள வெள்ளைப்பிரம்பில்,
1. Alert deductions – முன்னாலுள்ள பொருளைத்தட்டி உணரத் தேவையில்லை. இதில் ஒலி எழுப்பும் அமைப்பு உள்ளது. இரவு நேரத்திலும் வீதியைக் கடக்க உதவும் LED சென்ஸர் லைட் உள்ளது. இது வாகன ஓட்டுனர்களுக்கும் விளங்கும். கண்தெரியாதவருக்கு காது கேட்காமல் இருந்தால் அததற்கென கைப்பிடியில் ஒலியதிர்வு உள்ளது
2. Smoke deductions – புகையை உணரும் ஒலி எழுப்பும் சென்ஸர் உள்ளது.
3. Bluetooth deductions – வீட்டிற்குள்ளிருந்து இன்னொருவர் இயக்கும் வண்ணம் Bluetooth வசதியும் உண்டு.
மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, இதனை தயாரிப்பதற்காக எனது குடும்பத்தினரும், நண்பர்களும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஊக்கம் தந்து தட்டி கொடுத்தார்கள்.
பணத்தை சேகரிக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் குத்திகளை சீலையில் கட்டி முடிச்சிட்டு கிணற்றிலே கூட சேமித்திருக்கிறேன்.

விடாமுயற்சி, நம்பிக்கை இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இன்னும் இதனை நவீனமயப்படுத்த முடியும். ஒன்லைன் ஊடாகவே அனைத்து சென்சர்களையும் கொள்வனவு செய்து கணணிமயப்படுத்தி ஒரு சிறிய நினைவகத்தில் (Memory) வைத்து இயக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளேன்.
கல்லூரியின் அதிபர் – பி.எம்.எம். பதுறுத்தீன்
எமது பாடசாலை மாணவன் எம்.ரி. முஹம்மட் ஜினானை பாடசாலை சமூகம் பாராட்டுகிறது. இவரது கண்டுபிடிப்பு ஊடாக இன்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெயர் பெருமை பேசப்படும் அளவிற்கு மாறியுள்ளது. இவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், இவரது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இலங்கையின் இளம் விஞ்ஞானிகளுக்கான அங்கிகாரத்தை இந்த மாணவனுக்கு பெற்றுக் கொடுத்து இவரை மேலும் உயர்த்த வேண்டும். இவரது திமையை வெளி உலகிற்கு கொண்டுவந்த ஊடகவியலாளரையும் ஊடக நிறுவனத்தையும் கௌரவத்துடன் பாராட்டுகிறேன்.
கல்லூரியின் பிரதி அதிபர் – ஏ.முஹம்மட் அன்சார்
இன்று நவீன ஸ்மாட் கையடக்க தொலைபேசிகளை பல மாணவர்கள் முறையற்ற விதத்தில் பயன்படுது்தி பல பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். சில சந்தர்பங்களில் தற்கொலையில் முடிந்த சம்பவங்களை கூட ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறது. இவ்வாறான ஒருகால கட்டத்தில் மாணவன் ஜினான் கையடக்க தொலைபேசியை சமூக பயன் பாட்டிற்காக முறையாக பயன்படுத்தி (YouTube) ஊடாக பல்வேவறு தகவல்களை பெற்று சமூகத்தில் நலிவுற்ற ஒரு சமூகத்திற்காக இந்த நவீன வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்துள்ளார். மாணவர்களை வளப்படுத்தினால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த மாணவன் நல்லதொரு உதாரணம் என்றார்.
உலகத்தில் 314 மில்லியன் மக்கள் பாரதூரமான பார்வைக்குறைபாடு உள்ளவர்களாகவும், 37 மில்லியன் மக்கள் முற்றாகப் பார்வையிழந்தவர்களாகவும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வையிழந்து வாழ்வது என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது என்பதை இப்போது இதை வாசிக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
குழந்தைப்பருவத்தில் இருந்து கண்ணுக்கு ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உண்டு வருவதோடு கண்னின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய பயிற்சிகளையும்; செய்து வருவதன் மூலமும் எதிர்காலத்தில் பார்வைக் குறைபாடுகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம்12ல் விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் எம்.ரி.முஹம்மட் ஜினான் என்ற மாணவன் இந்த கண்டுபிடிப்பு பார்வையற்றோருக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என நாமும் எதிர்பார்கிறோம். இவரது முயற்சி இன்னும் வளர்ச்சியடைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

Thinakaran//