பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டத்தை நிறைவு செய்த, மருத்துவத்துறை மாணவர்கள் சுமார் 1,450 பேர் பயிலுனர் வைத்தியர்களாக நியமனம் வழங்கப்படவுள்ளனர்.
இன்று (11) பிற்பகல் 2.00மணிக்கு அலரி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.