அத்தியாவசிய சேவைகளுக்கான பொது மற்றும் தனியார் அலுவலகங்களை அணுகுவதை கட்டுப்படுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
இக் காலப் பகுதியில் பரவும் கொரோனா பொது இடங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கையை குறைந்த பட்சமாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலதிக அறிவிப்பு வரும் வரை அரசு நிறுவனங்களில் பொது நாட்கள் நடத்தப்படாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.