பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்காக ஆசிரியை ஒருவருக்கு குருணாகல் மேல் நீதி மன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குருணாகல் நகருக்கு மத்தியில் காணப்படும் பிரல்யமான பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை விதித்த நீதிபதி மேனகா விஜேஹந்தர பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டார்.
நஷ்டஈடு செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதற்கு மேலதிகமாக ரூபா 10000 தண்டமும் விதித்தார்
இது 2011 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.