பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் மந்தபோசனையில் வாடும் பிள்ளைகளுக்கு மட்டுமாவது குறைந்தபட்டசம் 26 லட்சம் முகக்கவசங்களை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
நேற்று (14) மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும இதனைத் தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை பாடசாலைகளில் தடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்ட்டுள்ளதாகவும், பாடசாலை ஆரம்பிக்க முன்னர்குறைந்த பட்டசம் 20 ஆயிரம் உடல் வெப்பம் அளக்கும் கருவிளையும் நீர் வசதிகளுக்கான பாத்திரம் (சின்க்) பத்தாயிரமும் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெரும குறிப்பிட்டார்.