மார்ச் 21ஆம்திகதியை நில அளவைத் தினமாக பிரகடனப்படுத்துதல்
ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதியை தேசிய நில அளவை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் சர்வதேச நில அளவை அமைப்பினால்; சர்வதேச நில அளவை தினமாக மார்ச் மாதம் 21ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதற்கு சமமான வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ஆம் திகதியை நில அளவை தினமாக பிரகடனப்படுத்துவதற்காக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.