முன்பள்ளிகளை ஒரு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி செல்லும ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி முன்பள்ளிகளின் பிரச்சினைகள் தொடர்பாகக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமான முன்பள்ளிகளை தரமாக திட்டமிட்டு நடதத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.