“குரு அபிமாணி கொடுப்பனவு”:
முன்பள்ளி ஆசிரிய / ஆசிரியைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த ரூ.250/= கொடுப்பனவை ரூ.2500/= மாதாந்த கொடுப்பனவாக அதிகரித்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.
02. மேற்படி கொடுப்பனவுக்காக முன்பள்ளி ஆசிரியர்களைத் தெரிவுசெய்வதற்கு உரிய குறிகாட்டிகள் கீழ்வரும்படி அமைந்திருக்கும்.
1. குறித்த ஆசிரிய / ஆசிரியைகளின் வயது 18 வருடங்களுக்கு மேற்பட்டதாகவும் 65 வருடங்களுக்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.
குறித்த ஆசிரிய / ஆசிரியைகளின் ஆகக் குறைந்த கல்வித் தகைமை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (சா/த) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தில் (சிறுவர் செயலகம் பதிவுசெய்த நிறுவனமொன்றிலிருந்து பெற்ற முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி / முன்பள்ளி பற்றிய டிப்ளோமா இருத்தல் வேண்டும்.
அல்லது,
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனமொன்றிலிருந்து பெற்ற முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி / முன்பள்ளி பற்றிய ஒருவருட டிப்னோமா / சான்றிதழ் பாடநெறியைப் பயின்றிருத்தல் வேண்டும்.
அல்லது.
மூன்றாம்நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட (Accreditation) பயிற்சி நிறுவனமொன்றிலிருந்து பெற்ற (NVQ Level 4 அல்லது அதற்கு மேற்பட்ட) முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி / முன்பள்ளி பற்றிய டிப்ளோமா / சான்றிதழ் பாடநெறியைப் பயின்றிருத்தல் கட்டாயமாகும்.
மேற்படி ii இல் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைதல் என்பது, தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட 06 பாடங்களில் சித்தியும் 03 பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும் என்று பொருள்படும்.
IV. எவ்வாறாயினும் மேற்படி க.பொ.த (சா/த) பரீட்சையில் சீத்தியடையாத ஆசிரியைகளின் தொடர்ச்சியான சேவைக்காலம் 5 வருடங்களாகவும் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி பற்றிய டிப்ளோமா தகுதி இருந்தால் இந்த நன்மையைப் பெற்றுக்கொடுக்கலாம்.