பெப்ரவரி 15 ஆம் திகதி மேல்மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து, முன்பள்ளிகளையும் குறிப்பிட்ட தினத்தில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முன்பள்ளிகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் பகுதிகள் தவிர்ந்த அனைத்து பிரதேசங்களிலும் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெப்பமானி, கைகழுவதற்கான ஏற்பாடு முதலானவற்றை முன்பள்ளிகளுக்கு வழங்குவதற்கு பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.