இரண்டாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
21 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த முஸ்லிம் பாடசாலைகள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக பிற்போடப்பட்டது.
தமிழ் சிங்களப் பாடசாலைகளை மே ஆறாம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் நோற்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ள றமழான் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது.
எனவே, றமழான் மாதம் முடிவடைந்து எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப்பி பிரிவின் பணிப்பாளர் தாஜுதீன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் பாடசாலைகள் நடைபெறாத நாட்களுக்குப் பதிலாக வேறு நாட்கள் பாடசாலை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.