(4,நெவம்பர், teachmore.lk)
தென் மாகாண கல்வித் திணைக்களம் மூன்றாம் தவணைப் பரீட்சையை காலை 7.45 முதல் மாலை 5.15 வரை நடாத்துவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளது.
தென் மாகாணப் பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளுக்கான நேரசூசியின் படி நவம்பர் 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் தரம் 10 க்கான பரீட்சைகள் நவம்பர் 6, 7 ஆகிய திகதிகளில் காலை 7.45 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ளது. அவ்வாறே தரம் 11 க்கான பரீட்சைகள் நெவம்பர் 13 ஆம் திகதி காலை 7.45 மணி முதல் பிற்பகல் 5.15 மணி வரை நடைபெறவுள்ளதாக தென் மாகாண கல்வித் திணைக்களம் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள நேரசூசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையை காலை முதல் மாலை 5. 15 வரை நடாத்தும் இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மாத்திரமின்றி மாணவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவர் எனச்சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இது பரீட்சை தொடர்பான கோட்பாட்டு மற்றும் பிரயோக அறிவு கொஞ்சமுமற்ற அதிகரிகளினால் திட்டமிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளது.
எனவே, இந்த நேர சூசியை மாற்றி, மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படாத வண்ணம் பரீட்சையை திட்டமிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.