பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயல்முறையைத் தொடங்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஒன்றியம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பல்கலைக்கழகங்க பிரவேசத்திற்கான குறைந்தபட்ச இசட் மதிப்பெண் படி புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்றும், இசட் மதிப்பெண்களை தீர்மானித்த செயன்முறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெற்றார் ஒன்றியம் கோரிக்கை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சரியாக கணிப்பீடு செய்த வெட்டுப் புள்ளியை வெளியிட்டிருப்பின், பழைய புதிய பாடத்திட்ட அடிப்படையில் மாணவர் உள்ளீர்ப்பு விகிதத்தை வெளியிடுமாறு சவால் பெற்றார் ஒன்றியம் சவால் விட்டுள்ளது.
இவர்கள் சேகரித்த தகவல்களின்படி,பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான அனுமதியின் படி, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையை விட பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்கு என்றும்
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மூன்று ‘ஏ’ சித்திகள் பெற்ற மாணவர்கள் கூட இந்த முறை மருத்துவ பீடங்களில் நுழைவதற்கான வாய்ப்பை இழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கின் பெற்றார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மருத்துவ பீடத்திற்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மொத்தமாக 645 பேரும் பழைய பாடத்திட்டத்தின ்படி 1300 பேரும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.