சேவைக்கு வருகை தருவது கட்டாயமில்லாத சந்தர்ப்பத்தில் குறைந்த பட்சம் மூன்று வாரங்களாவது வீடுகளில் இருந்தவாறே கடமைகளைச் செய்யுங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக ஊழியர்களுக்கு அவ்வமைப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.
“எமக்கு கிடைத்துள்ள அழைப்புக்களுக்கு ஏற்ப நாம் சேவையாற்ற வேண்டும். ஆனால் தலைமையகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வேண்டும். இது அனைவரது பாதுகாப்பிற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்தோலியோ குடரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் ஆரோக்கியத்துக்கு நான் முன்னுரிமை தருகிறேன். பாதுகாப்பாக இருங்கள். அறிவுபூர்வமாக செயற்படுங்கள். அதே போல் பிறர் மீது கனிவு காட்டுங்கள்.” என்று அவர் தமது பணியார்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க நியுயோர்க் நகரின் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சுமூர் 3000 பேர் பணியாற்றுகின்றனர்.
பிலிபைன் நாட்டைச் சேர்ந்த ராஜ தந்திரி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை இவ்வாரம உறுதிப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாமவர் அவராவார்.
உலகின் பல நிறுவனங்களும் தமது பணியாளர்களை வீடுகளில் இருந்தவாறே சேவையாற்றுமாறு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.