தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஞாயிறு மற்றும் நோன்மதி தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதை தடை செய்யும் விதிமுறைத் திருத்த சட்ட மூலத்துக்கு சார்பாக பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை இன்று மேல் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த திருத்தச்சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி தனியார் வகுப்புகளை நடத்தும் சுதத் டியகுஆராச்சி உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் விஷேட மனுக்கள் சிலவற்றை தாக்கல் செய்துள்ளனர். தஹாம் என்ற அறநெறிக்கல்விக்கு தடை ஏற்படும் வகையில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவது மொத்த கல்வி துறைகள் மீது மேற்கொள்ளப்படும் அகௌரவம் என்றும் பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தனியார் வகுப்புகளை நடத்துவது பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (அ.த.தி)