கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 1 முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புபட்ட மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல், பரீட்சை எதிர்பார்க்க அல்லது பரீட்சை வினாத்தாளை ஒத்த வினாத்தாள் வழங்குதல், வழங்குவதாக பிரச்சாரம் செய்தல், பிரச்சாரம் செய்யும் ஏதேனும் ஒன்றை தம்மோடு வைத்திருத்தல் என்பன தடை செய்யப்படுகின்றன.
இந்தத் தடை 2021.02.23 நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தகைய மீறும் செயற்பாடுகளை ஏதேனும் ஒன்றைக் கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.