மேல் மாகாணப் பாடசாலைகளின் தரம் 11 க்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கும் ஜனவரி 25 ஆம் திகதி முதல் தரம் 11 க்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரம் அழைககப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலையை நடாத்துவதற்கு தேவையான ஆகக் குறைந்த ஆளணியினரை அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு ஏனைய மாகாணங்களில் வசிக்கும் ஆசிரியர்களை மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு அழைப்பது பொருத்தமில்லை என்ற சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பரிந்துரைக்கேற்ப, வெளிமாகாணங்களிலிருந்து வருகை தரும் ஆசிரியர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.