தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மேல் மாகாணத்தின் பிற பகுதிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 25 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், மார்ச் மாதத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.