பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான வழிகாட்டல் ஒன்றை மேல்மாகாணக் கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மாகாணத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல் சுற்றறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சு விடுத்துள்ள வழிகாட்டல்களைத் தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணக் கல்விப் பணிப்பாளர், பீ. சிரிலால் நேனிஸ் அவர்களின் ஒப்பத்துடன் வலய, கோட்ட கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு இச்சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டல் சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.
(உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பல்ல என்பதைக் கவனிக்கவும்)
மொழி பெயர்ப்பு – teachmore.lk
1. பாடசாலைக் கற்றல் செயற்பாடுகளை எளிய மட்டத்தில் ஆரம்பித்து, மகிழ்ச்சியுடனான கற்றலாக மாற்றுவதற்கான உத்வேகப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஜ{ன் 29 முதல் ஜ{லை 3 வரை இதற்கான செயற்பாடுகளை இனங்கண்டு அதன்படி செயற்றிட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும்.
2. 2020.06.29 முதல் 2020.07.03 வரை 2019 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பாடமட்டத்தில் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும்
3. இரண்டாம் வாரத்தில் க.பொ.த சாதாரண தரத்திற்கு தோற்றும் மாணவர்களுக்காக அனைத்துப் பாடங்களுக்கும் பரீட்சை நடாத்தப்படவேண்டும். தரம் 10 இல் கற்ற அம்சங்களையும் உள்ளக்கி இரண்டு மணி நேரத்திற்கு குறையாத பரீட்சை வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.
4. பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக பகுப்பாய்வு செய்து, தேர்ச்சி தேவைப்படும் மாணவர்களுக்கு குறைநிரப்பு செயற்றிட்டமொன்றை தயாரிக்க வேண்டும்.
5. பெறுபேற்றுச் சுருக்கம் கோட்டத்தின் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்படவுண்டும்.
6. ஏனைய வகுப்புக்களுக்கு பாடசாலை ஆரம்பமாகி மாதத்திற்குள் மாதாந்தப் பரீட்சை எளிய முறையில் நடாத்தப்படவேண்டும்.
7.க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 ஆகியவற்றுக்கு பரீட்சைகளை மையமாகக் கொண்ட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
8. பாடசாலை நேரசூசி திருத்தப்பட வேண்டும்.
3.30 வரை நடைபெறும் வகுப்புகளுக்கு 55 நிமிடங்கள் அடிப்படையிலான காலம் ஒதுக்கப்படவேண்டும். எஞ்சிய 40 நிமிடங்களை கட்டங்கட்டமாக இடைவேளை வழங்க பயன்படுத்த வேண்டும்.
9.தரம் 13 மாணவர்களின் வருகையை கருத்திற் கொண்டு தரம் 12 மாணவர்களுக்கு கற்றல் மேற்கொள்ள முடியுமாயின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்து அனுமதியைப் பெற்று வகுப்புக்களை நடாத்த வேண்டும்.
10. அனைத்து ஆசிரியர்களும் பாடக்குறிப்புக்களைத் தயாரித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
11. அனைத்து ஆசிரியர்களும் கற்றல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வெளிக்கடமைகளுக்கு, வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே செல்ல முடியும்.
12. கற்றல் செயற்பாட்டுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக விடுமுறை பெறும் ஆசிரியர்கள் தொடர்பாக வலயக் கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.
13. ஆசிரியர்கள் தனிப்பட்ட விடுமுறைகள் கற்றல் நடவடிக்கைகளைப் பாதிக்காத வகையில் முகாமை செய்ய வேண்டும். அதற்கான திட்டத்தைத் தாயரித்து அனைத்து ஆசிரியர்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
14 கல்வியுடன் நேரடியான தொடர்பில்லாத எனைய இணைச் செயற்பாடுகளை மேற்காெள்வதைத் தவிர்ப்பதோடு, அவ்வாறான ஏதேனும் நிகழ்வுகள் நடாத்தப்படவேண்டுமானால் அது தொடர்பாக, வலய அல்லது கோட்ட கல்விப் பணிப்பாளரிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
15 பாடசாலைக் காலம் தவிர்ந்த காலத்தில் தேவையின் அடிப்படையில் ஏனைய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் செயற்பாடுகளை ஒழுங்குமுறையில் மேற்கொள்ள வேண்டும்.