மே மாத சம்பளத்தை அல்லது சம்பளத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர கோரியமை ஒரு தனிப்பட்ட கோரிக்கை எனவும் அவ்வாறு குறிப்பிட்ட கோரிக்கைக் கடிதத்த்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று நடைபெற்ற ஊடகவியலாயர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் நாட்டின் நிலமை கருதி இந்தக் கோரிக்கைகயை முன்வைத்திருந்த போதிலும், அவர் சமூக ஊடகங்களில் தாறுமாறாக விமர்ச்சிக்கப்படுவதாகவும் அது நியாயமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.