நாட்டின் வரவுசெலவுத் திட்ட துண்டுவிழும் தொகையின் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, அரச ஊழியர்கள் தமது முழு சம்பளத்தை அல்லது சம்பளத்தின் ஒரு பகுதியை அன்பளிப்பாக விதவைகள் அனாதைகள் நிதியத்திற்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தனிப்பட்ட
வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழியர்களும் தமது சம்பளத்தை அன்பளிப்புச் செய்ய ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், இவ்வாறு ஏனைய அரச ஊழியர்களும் தமது சம்பளத்தை அன்பளிப்புச் செய்வார்கள் என தான் நம்புவதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் சம்பளத்தை முழுமையாக வழங்குவது சிரமமாக இருக்கும். மாத சம்பளத்தின் பாதியை, அல்லது ஒரு வாரத்தின் சம்பளத்தை வழங்குவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.