மைக்ரோ-சொப் கணனி விஞ்ஞான தின செயலமர்வு கொழும்பில் மைக்ரோ-சொப் தலைமையலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் குறைந்த வருமானத்தைக் கொண்ட இளைஞர் – யுவதிகள் அடங்கலாக 100ற்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உண்மையான உலக பிரச்சினை தொடர்பில் தீர்வு காணும் ஆற்றலை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆற்றலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.(news.lk)