நாளை நடைபெற உள்ள சுகயீன விடுமுறைப் போராட்டம் குறித்து மௌனம் காத்துவந்த கல்வி அமைச்சு இன்று மாலை அறிக்கை ஒன்றை விட்டுள்ளது.
அரசாங்கம் ஆசிரியர்களுக்கும் கல்வித் துறைக்கும் பல சேவைகள் செய்துள்ள போதிலும், நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து அவை வெற்றி அடையும் சந்தர்ப்பத்தில், இந்த வெற்றியை தமது வெற்றியாகக் காட்டுவதற்கு தொழில்சங்கங்கள் நாளை போராட்டம் நடாத்த உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
03/2016 இன் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டதாரி ஆசிரியர் பெற்றுவந்த 16120/- அடிப்படைச் சம்பளம், 33330/- ஆக அதிகரித்துள்ளதாகவும்
சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு 2018 செப்டம்பரில் கல்வி அமைச்சு அரச துறை சம்பள சீரமைப்பு விசேட ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளதாகவும்
2025 முதல் கல்விமாணி பட்டதாரிகளை மாத்திரமே சேவைக்கு உள்ளீர்த்து கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க தீர்மானித்துள்ளதாகவும்
வேறு பல மாற்றங்களை கல்வி த் துறையில் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இவற்றின் வெற்றிகளை தமது வெற்றிகளாக சில தொழில் சங்கங்கள் மக்களுக்குக் காண்பிக்கவும் தமது அரசியல் நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்ளவும் ஆசிரியர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதுவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.