இதேபோன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை; அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்புட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி பயிலும் மாணவர்களின் நலன்கருதி ஆறாயிரத்து 500 சதுர அடிகள் கொண்ட ஆறு மாடிக் கட்டிடத்தை அமைத்துக் கொடுப்பதற்கு பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் லைக்கா மொபைல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக 74 கோடி ரூபாஎடிசலவிடப்படவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய மாடிக் கட்டிடம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் அமைப்பதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
இதற்காக 74 கோடி ரூபாஎடிசலவிடப்படவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய மாடிக் கட்டிடம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் அமைப்பதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை முழுமையான சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மாடிக்கட்டிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவத விடயம்)
1979ஆம் ஆண்டில் 65 மாணவர்களைக் கொண்ட 1ஆவது குழவை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் தற்பொழுது 937 மாணவர்கள் கல்வி கற்கும் பீடமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரையில் பல்லின மக்கள் கட்டமைப்பைக் கொண்ட வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அபிவிருத்தி கண்டிருந்த போதிலும் அதற்கு அமைவாக அவர்களுக்கு வசதிகளை செய்யும் வகையில் விரிவுரை மண்டபம் விஞ்ஞான பீடம் வகுப்பறை இருப்பிட வசதி முதலான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்றிருக்கவில்லை. இலங்கையின் ஞானம் நிதியத்தின் ஊடாக 740மில்லியன் ரூபா முதலீட்டுன் நவீன வசதிகளுடன் 6500 சதுர கிரோமீற்றரும் துணை கட்டிடத்தொகுதி ஒன்று நிர்மாணித்து யாழப்;பாண பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு பிரிட்டனின் லைக்கா கூட்டுறவு வர்த்தகம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
தரமான மற்றும் பயிற்சியைக் கொண்ட சுகாதார தொழிற்துறையினரை உருவாக்குவதன் மூலம் உயர் தரத்தைக் கொண்ட சுகாதார வசதியை நாட்டுக்;குள் வியாபித்தல் உயர்தர பரீட்சையில் தகுதிகளை பூர்த்தி செய்த ஆற்றல் மிகுந்த மாணவர்களை தேசிய பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் நோக்குடன் 70.46 மில்லியன அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடமொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் 3 கட்டங்களின் கீழ் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த முதலீட்டில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரண நிதியாகவும் எஞ்சிய 26.46 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக சப்ரகமுவ வைத்திய பீடத்தை ஸ்தாபிக்கும் திட்டத்தின் முக்கிய பீட கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்கும் உகரணங்களை கொள்வனவு செய்தல் உள்ளடக்கிய 2ஆவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணக் கடன் தொகையும் அபிவிருத்திக்கான சவுதி நிதி மூலம் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது (News.lk)