ரயில்வே சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சின் சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் பாதை பரிசோதகர்கள், சமிஞ்ஞை கட்டமைப்பு அதிகாரிகள் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை நாரஹென்பிட்ட ஷாலிக்கா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இவர்களின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றி நிதியமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த கால எல்லை அவசியம் என்று உரிய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.