ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று பீடங்களும் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார். விஞ்ஞானபீடம் முதுகலை சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் என்பன நாளை திறக்கப்படவுள்ளன.
கடந்த வாரம் மாணவர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையினால் சில பீடங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.