ஒரு வகுப்பில் இருக்கக்கூடிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சமர்ப்பித்த அமைச்சரவை குறிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2016 இல் ஒரு வகுப்பில் இருக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் 2015.10.21 ஆம் திகதிய அமைச்சவைத் தீர்மானத்தின் படி, அப்போதைய கல்வி அமைச்சரின் வேண்டுகோளின் படி, 2021 வருடத்தில் மற்றுமு் அதன் பின்னர் மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக குறைக்குமாறு 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் மாணவர்கள் எண்ணிக்கையை 35 ஆக குறைப்பது சாத்தியமாகவில்லை என கல்வி அமைச்சு வெளிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்பட்டப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் 2021 ஆம் ஆண்டு முதல் 45 வரையிலான மாணவர்களை ஒரு வகுப்பில் உயர்ந்தபட்சம் சேர்க்க முடியும் என்ற திருத்தத்தை மேற்கொள்ளவும், அதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.