ஒருபாடசாலையின் வகுப்பறையில் நான்கு சுவர்களுக்குமிடையேசுமார் முப்பது தொடக்கம்நாற்பது மாணவர்கள் நாளொன்றில்ஆறு மணித்தியாலங்கள் தளபாடங்ளுடனும், புத்தகங்களுடனும் காலத்தைக் கழிக்கின்றனர். வகுப்பறையில்பெரும்பாலும் ஒரே வயதுக்குழுவினரைக் கொண்டவர்களாகவே காணப்படுகின்ற போதிலும், அர்களுடையவிருப்பு, வெறுப்பு, தேவைகள், சிந்தனைகள், செயற்பாடுகள், தகைமை மட்டம், குடும்பப் பின்னணி, சூழல் என்றஅனைத்து காரணிகளும் செல்வாக்குச்
செலுத்துகின்றன.
ஒரு பாடவேளைக்காகச் செல்கின்ற ஆசிரியர் ஒருவர், இத்தனை மாணவர்களையும் தனது பக்கம் ஈர்த்து தனது பாட நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றுவதற்கு பாரிய முயற்சி எடுக்கவேண்டியுள்ளது. வகுப்பறையில் முதல் நிலை முகாமையாளர் என்ற பெருமைக்குரிய ஆசிரியரின் முயற்சிக்குத் தமது பாடப்புலமையும், தொழில் தகைமையும் வழிகாட்டுகின்றன. வகுப்பறையில் காத்திருக்கின்ற அனைத்து மாணவர்களினது எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வெற்றிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்த வேண்டியது ஆசிரியரின் பாரிய பொறுப்பாக காணப்படுகின்றது. சமகாலத்தில் கற்றல் சூழலை ஏற்படுத்துவதிலும், வகுப்பறையில் மகிழ்ச்சியைப் பேணுவதிலும் பல ஆசிரியர்கள் தோல்வியைக்கண்டு வருகின்றனர்.
வகுப்பில் மாணவர்களின் ‘கவனமின்மை’ என்பதனை போக்க, அதாவது மாணவர்களின் கவனத்தை ஈர்க்க ஆசிரியர்கள் எவ்வாறான முறைகளைக் கையாளலாம்.
தண்டனையானது மாணவர்கள் பாடத்தைக் கவனிப்பதைப் போல் பாசாங்கு செய்யத்தூண்டக் கூடுமே தவிர உண்மையில் பாடத்தைக் கவனிக்கச் செய்யாது. கவனமின்மையைப் போக்க ஒரேவழி மாணவர்களுக்குச் கவர்ச்சியூட்டக் கூடிய, அவர்களின் அறிவு நிலைக்கு தகுதியாகவுள்ள பாடங்களை அவர்களின் கருத்துப்படி செய்தலேயாகும். கவர்ச்சித் தன்மையை அதிகரிப்புச் செய்வதன் மூலம் தாமாகவே கவனமின்மையை நீக்கி வெற்றி கொள்ளச் செய்யலாம். கூர்ந்து கவனித்தல் பயிற்சியானது கவனச் சிதைவை குறைக்கின்றது. ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கவனத்தை பாடங்களில் பதியவைக்குமாறு கவனத்தை ஈர்க்கவல்ல புறக்காரணிகளையும் நன்றாக பயன்படுத்த வேண்டும்.
விருப்பத்துடனான பாடப்பிரவேசம், இனிமையான பேச்சுத்திறன், முக்கிய கருத்துக்களை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறல், கரும்பலகையில் எழுதும் போது வண்ண வெண்கட்டிகளை உபயோகித்தல், நவீன கற்பித்தல் துணைச்சாதனங்களை (பல்லூடக எறி, இன்றநெற், சிமாட் வகுப்பறை….) பயன்படுத்தல், விருப்பத்துடன் மாணவரைக் கவரக் கூடிய எடுத்துக்காட்டுக்களை முன்வைத்தல், வகுப்றைச்செயல்களில் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாதவாறு மாறுதல்களைச் செய்தல், என்பன மாணவர்களை தொடர்ந்து பாடத்தைக் கவனிக்கச் செய்யும். பாடங்களின் பால் விருப்;பத்தினையும், ஆர்வத்தினையும் தோன்றச் செய்ய வேண்டும். பாடத்தின் மேல் மாணவர்களுக்கு விருப்பம் ஏற்ப்பட்டால் கட்டாயமேதுமின்றி தாங்களாகவே ஆர்வம் கொண்டுள்ள பொருட்களுடனும், இலக்குகள், செயல்களுடனும் பொருந்திக் கற்பார்கள். பிள்ளையை மையமாக கொண்ட தற்கால கலைத்திட்டம் இதைத்தான் செயலாக்க முயல்கின்றது. விளையாட்டு முறைகள் ஊடாக கல்வியை கற்பதற்கு இதுவே முக்கியமானதாக காணப்படுகின்றது.
அதே போல் புதிய எண்ணக்கருக்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் போது அவற்றை மாணவர்களின் முன்னறிவோடு பொருந்தும்படி கற்பித்தல் வேண்டும். மாணவர்கள் மீதான அக்கறை, கவனத்தை கவரும் வேலைகள், அவர்களுக்கு சலிப்பைக் கொடுக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். தாம் கற்பிக்கும் பாடத்தில் ஆசிரியரே ஊக்கம் உடையவராக இருத்தல் அவசியமாகின்றது. இது மாணவர்களிடமும் பரவி அவர்களையும் ஆர்வமிக்கவர்களாக்கச் செயல்படுத்தும் (Amber Hodgson, 2009) குறிப்பிடுகின்றார். வகுப்பறையில் இவ்வாறான கவனித்தல் செயற்பாடானது மாணவர்களின் கல்வியிலும் ஆசிரியரின் கற்பித்தலிலும் அதிக மாற்றத்தை ஏற்படுத்தும்.
வகுப்பறைக் கற்பித்தலில்; மாணவர்களின் கவனத்தை தடுக்க கூடிய பல காரணிகளும் காணப்படுகின்றன. அவையாவன காலைநேர உணவின்றி பட்டினியுடன் வரும் பிள்ளைகள்;, உடல் நலம் குறைந்த களைப்படைந்த பிள்ளைகள், வீட்டுக் கவலைகள், வகுப்பில் மாணவர் உட்காரச் செய்யப்படும் வசதி குறைவு, வகுப்பறையின்; வெளிச்சம், காற்றோட்டம் இல்லாதிருத்தல், என்பன தொடர்ந்தும் மாணவர்கள் பாடத்தை கவனிப்பதைக் குறைத்து விடும், சிறுபிள்ளை வெகுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடத்தை கவனிப்பது கூட இயலாத கரரியமாகும். எனவே இவ்வாறான பல பிரச்சினைகளை ஆசிரியர் இனங்கண்டு அதனை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். மாணவரின் சத்துணவுத்திட்டம், மாணவரின் உடல்நல பரிசோதனை, மாணவர் களைப்படையா வண்ணம் உருவாக்கப்பட்ட நேரசூசி, போதிய வெளிச்சம், காற்றோட்டம், பிறவசதிகள் கொண்ட சிறப்பான கற்றல் சூழல், தண்டனை வழங்காது பாராட்டுதல், பரிசுவழங்கல், அவற்றுடன் மாணவரிடத்தில் அன்பு, பாசம், காப்பு, கணிப்பு என்பவற்றை ஏற்படுத்தி, கற்பித்தலிலும் மாணவர் கவனத்தை ஈர்த்து, கல்வியில் முழுப்பயனையும், பாடத்தின் குறிப்பான குறிக்கோளையும் அடைந்து வெற்றி கொள்ள முடியும் என்பது திண்ணமாகும்.
ஆசிரியர்
இராசசிங்கம் நாகேந்திரன் (BA, PGDE(Merit), PGDSNE, M.Ed)
மட்/ககு/செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம்.
தற்போனதய சூழ்நினலயில் மாணவர்களின் கல்வி பாதிக்பட்டுள்ள வேனலயில் கற்பித்தனள பல சிரமங்கனளயும் பாராது செயற்பட்டனமக்கு வாழ்த்துக்கள மேலும் சா/த மாணவர்களுக்கான வீடியோ மூலம் கற்பித்தனள பதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்