வகுப்பறை மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடுகிறது.
பாடசாலை வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர் எண்ணிக்கையை உயர் நீதிமன்றம் 35 ஆக தீர்மானித்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அமைச்சரவை எண்ணிக்கையை 45 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையின் இத்தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதி மன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்ய இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வகுப்பறையில் இருக்கக் கூடிய மாணவர் எண்ணிக்கை 35 ஆக, 2011 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படைநில் 2021 ஆம் ஆண்டாகும் போது வகுப்பறையில் 35 மாணவர்களே இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டதாக ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இப்பின்னணியில் அமைச்சரவைத் தீர்மானம் உயர் நீதிமன்றம் தீர்ப்பை மீறுவதாகும் என அவர் விளக்கினார்.