வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகி 10 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக நடைபெறும் என கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கல்வி அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தை தவற விடுபவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.