தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வழங்கியுள்ளார்.
இந்த விடுமுறைக்கான மாற்றுப்பாடசாலை பின்னர் அறிவிக்கப்படும் தினத்தில ்நடைபெறும்