வடமேல் மாகாணத்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அடுத்த திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படாது என்று ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.
23 ஆம் திகதி திங்கட்கிழமை மேல் மாகாணத்தைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், குருநாகல மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பதை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி,
குருநாகல நகரசபைப் பகுதி
குருநாகல மருத்துவ அலுவலர் பிரிவு
மல்லவபிட்டி
குலியபிட்டி நகர சபை எல்லை மற்றும் மத்திய மகா வித்தியாலயம்
கனாதுல்ல மகா வித்யாலயம்
தியதலாமுல்ல மகா வித்யாலயம்
பன்னல நகர சபை எல்லை மற்றும் இரியகொல்ல
நாரமல நகர எல்லைகள்
மஹவ கஜனெகம, அம்பகஸ்வெவ, பலல்ல, யபஹுவ மற்றும் மகவ விஜயபா வித்யாலயம்
ஆகியவை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் 1000 மமாணவர்களுக்கு அதிகமாக உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாவட்ட செயலாளரும் சுகாதார அதிகாரிகளும் தீர்மானிப்பர்.