உயர் கல்விக்காக அரசாங்கம் வழங்கும் வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர்ந்தபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சின் மாணவ கடன் பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சந்திமா ஜானகி மாணவர்களை கேட்டுள்ளார்.
மனித மூலதன ஒதுக்கத்தை ஏற்படுத்துவது இதன்பிரதான நோக்கம் என்று அவர் கூறினார். சந்தையில் கேள்வியுடையபட்டதாரிகளை உருவாக்குவது இதன் இலக்காகும். ஐந்து துறைகளில் 50 வகை பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கான கடனுதவி வழங்கப்படவிருக்கிறது. கல்வியை தொடரும் காலப்பகுதியில் எத்தகைய கொடுப்பனவையும் செலுத்த வேண்டியதில்லை . பட்டப்படிப்பை பூர்த்திசெய்து தொழிலை தேடுவதற்கு ஒருவருடகால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில் கிடைத்தவுடன் கடன் தவணைக் கொடுப்பவை திருப்பிச் செலுத்த முடியும்.