சம்பள முரண்பாடுகளைச் சீர்செய்தலுக்காக கடந்த அரசாங்க காலத்தில் பிரேரிக்கப்பட்ட இடைக்காலக் கொடுப்பனவை நிறுத்தியமை, சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான உரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமை, மற்றும் படிவங்கள் நிரப்புவதில் அதிக வேலைப்பழுவைச் சுமத்தல் முதலான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டம் இ்வ்வருடம் முனைப்புப் பெற்றுள்ளது.
இவ்வருடம் மூன்றாவது ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியகள் தயாராகுகின்றனர்.
முதல் போராடடம், கடந்த பெப்வரி 14 ஆம் திகதி ஜனாதிபதிக் காரியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாவது போராட்டம் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெற்றது. சுகவீன விடுமுறை அறிவிக்கப்பட்டு கல்வி அமைச்சின் முன்னால் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மூன்றாவது போராட்டம் எதிர்வரும் 16 தொடக்கம் 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் 19 ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான ஏற்பாடுகளுக்காக கொழும்பின் சில பாடசாலைகள் மூடப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. போக்குவரத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் முதலான காரணிகளை முன்னிட்டு இவ்வாறு பாடசாலைகள் சில மூடப்பட்டால் வேலை நிறுது்தத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு தினம் அரச விடுமுறை கிடைக்கும். அது நிர்வாக ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் போராட்டத்தை 16,17,18 ஆகிய திகதிகளில் மாத்திரம் முன்னெடுப்பது என அதிபர் ஆசிரியர்கள் தொழில்சங்கப் பிரதிநிதிகளின் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.