தற்போது வவுனியா பிரதேசத்தில் நிலவும் கோவிட்19 அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகர்ப் புறத்தின் ஆறு பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என வவுனியாக அரச அதிபர் சமன் பந்துசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், காமினி தேசிய பாடசாலை, தமிழ் கத்தோலிக்க கலவன் பாடசாலை, ரம்பகுளம் பெண்கள் பாடசாலை, சைவபிரகாச வித்தியாலயம், வவுனியா முஸ்லிம் வித்தியாலயம் என்பன நாளை திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாக நகரின் வியாபாரிகளிடையே மேற்கொள்ளப்படும் பிசிஆரம் பரிசோதைனைகள் முடியும் வரை நகரின் வியாபார நிலையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூட நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் ஏனைய பிரதேச பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என்றும் மாணவர்கள் சுகாதார நெறிமுறைகளைப் பேணி வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.