வவுனியா மற்றும் மகரகம தேசிய கல்வியியற் கல்லூரிகளை கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்துவதன்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவிக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா தொற்றாளிகள் அதிகம் இனங்காணப்பட்டு வருவதனால், தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரிக்கள் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் வவுனியா மற்றும் மகரகம தேசிய கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.