இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன எமது நிலையத்திற்கு கூறினார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதிகமானதாகும்.
அனைத்துப் பல்கலை;க்கழகங்களிலும் கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். பாதகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் அடுத்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் பிரிவு – பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கான, பல்கலைக்ககழக உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.