வெளிநாட்டு பல்கலைக்கழம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இணை அல்லது கிளை நிறுவனங்களாக இந்நாட்டில் பாடநெறியை நடாத்தும் நிலையங்களைப் பதிவு செய்யவும் அவற்றை மேற்பார்வை செய்யவும் அமைச்சரை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நே்றறு முன்னைய தினம் (26) ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் கற்கை நெறிகள் பொருத்தமானவையாக என்பதையோ அல்லது அவ்வாறான கல்வி நிலையங்கள் உரிய தரத்தில் செயற்படுகின்றனவா என்பதையோ கண்காணிப்பதற்கு எவ்வித ஒழுங்கமைப்பும் இல்லாத காரணத்தினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உயர் கல்வி நிலையங்களை பதிவு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பட்டம் ஒன்றின் தராதரத்தைப் பாதுகாக்கும் கடமையை குறித்த பல்கலைக்கழகம் மேற்கொள்ளும். எனினும் இலங்கையில் வெளிநாட்டு உயர் கல்விக்கான பட்டங்களை வழங்கும் நிறுவனங்களின் பட்டங்கள் தொடர்பான மேற்பார்வை மேற்கொள்ளப்படுவதில்லை.
எனவே, இலங்கையில் இயங்கும் சுமார் 500 க்கும் அதிகமான உயர் கல்வி நிலையங்கள் அனைத்தையும் பதிவு செய்து அவற்றை கண்காணிக்கும் ஒரு பொறிமுறை இதன் மூலம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.