ஹட்டன் பத்தன ஸ்ரீபாத கல்வியில் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இன்று (11) ஆம் திகதி முதல் இக்கல்லூரி தனிமைப்படித்தல் நிலையமாகப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு கற்றுக் கொண்டிருந்த 282 மாணவர்கள் அவரவர் வசிப்பிட அருகிலுள்ள நகருக்கு இராணுவத்தின் போக்குவரத்து வசதியூடாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அண்மையில் உள்ள நகர்களின் மாணவர்களை பெற்றார் தமது தனிப்பட்ட வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
கல்லூரியினுள் தங்கியிருந்த விரிவுரையாளர்கள் அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையத்தில் 250 பேரை தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.