ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்நப்பட்டுள்ளதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கோவிட் -19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மாணவர், இந்த மாதம் 7, 8 தேதிகளில் பாடசாலைக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார ஆய்வாளர் ஆர்.ஆர்.எஸ் மெதவெல உறுதிப்படுத்தினார்.
மாணவரின் தந்தையும் இதற்கு முன்னர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்தார்., அவர் கொழும்பு பகுதியில் பணிபுரிந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின்படி, மாணவர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.