மீரிகம, ஹாப்பிடிகமவையிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆறு ஆசிரிய மாணவர்கள், திவாலபிட்டி ஸ்ரீ ஞானவாச வித்யாலயத்தில் உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டுள்ளமையினால், அவர்கள் உட்பட கல்வியில் கல்லூரியின் 180 ஆசிரிய மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களுக்கும் வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட திவுலபிட்டி பெண்ணின் மகள் கல்வி கற்கும் பாடசாலை ஸ்ரீ ஞானவாச வித்யாலயா என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.