பாடசாலை மாணவர்களின் 10 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 24 வீதமானோருக்கு நீரிழிவு நோய் காணப்படுவதாக புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற புதிய கலைத்திட்ட மறுசீரமைப்புத் தொடர்பான நிகழ்வொன்றில், எதிர்கால கல்வித் திட்டத்தில் சுகாதாரக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் போது, இத்தரவுகள் வெளியிடப்பட்டன.
DIABRISK-SL எனும் கருப்பொருளின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்விலேயே இந்த அதிர்ச்சி மிக்க நிலமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வயதுப் பிரிவு மாணவர்களில் வகை 2 நீரிழிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது உடல் திணிவுச் சுட்டி அதிகரிப்பு, செயலூக்கமின்மை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது